Paristamil Navigation Paristamil advert login

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் ஸ்மார்ட் துணி!

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் ஸ்மார்ட் துணி!

19 ஆவணி 2024 திங்கள் 07:47 | பார்வைகள் : 3262


உடல் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் துணியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மொபைல் போன்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் ஏற்கனவே ஸ்மார்ட் ஆகியுள்ளன.

எதிர்காலத்தில் ஆடைகளும் இந்த ஸ்மார்ட் பட்டியலில் சேர்க்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

சூரிய ஒளியைப் பயன்படுத்தி நம்மை சூடாக வைத்திருக்கும் ஸ்மார்ட் துணியால் சூட் மற்றும் கோட்டுகளை உருவாக்கப்படவுள்ளன.

அதேபோல், நம் உடல் வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் துணியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

வாட்டர்லூ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த நோக்கத்திற்காக தேவையான ஸ்மார்ட் துணி தொழில்நுட்பத்தை நிரூபித்தனர்.

சூரிய ஒளி மற்றும் நம் உடலில் இருந்து வரும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த துணி அணிவதற்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.

சென்சார்களை இணைக்கவும், இதயத்துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை கண்காணிக்கவும் இந்த ஸ்மார்ட் துணி பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்