தெற்கு பிரான்சில் காட்டுத்தீ! - 320 ஹெக்டேயர்கள் நாசம்!
19 ஆவணி 2024 திங்கள் 07:44 | பார்வைகள் : 8880
பிரான்சின் தெற்கு பகுதியான Frontignan இல் காட்டுத்தீ பரவி வருகிறது. நேற்று இரவு வரையான நிலவரப்படி அங்கு 320 ஹெக்டேயர்கள் காடு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டு வாகனங்களிலும், உலங்குவானூர்திகளிலும் தண்ணீர் பாய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த முற்பட்டு வருகின்றனர். 350 தீயணைப்பு படையினர் களத்தில் போராடி வருகின்றனர்.
இன்று திங்கட்கிழமை நண்பகலின் பின்னர் உள்துறை அமைச்சர் Gérald Darmanin சம்பவ இடத்துக்கு விஜயம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan