கடலில் மூழ்கிய சிறுவன்.. கரையொதுங்கிய சடலம்!
                    19 ஆவணி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 7191
கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட சிறுவன் ஒருவனது சடலம், கரையொதுங்கியுள்ளது.
Berck (Pas-de-Calais) நகர கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஓகஸ்ட் 15 ஆம் திகதி 10 வயதுடைய சிறுவன் ஒருவன் கடலில் மூழ்கியிருந்தான். சிறுவனை தேடும் முயற்சி இடம்பெற்றது. ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை. அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த அச்சம்பவம் இடம்பெற்ற மூன்று நாட்களின் பின்னர், நேற்று ஓகஸ்ட் 18, ஞாயிற்றுக்கிழமை அருகே உள்ள Stella-Plage கடற்கரையில் சிறுவனது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
Berck கடற்கரையில் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குறித்த சிறுவன், அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தான். அதையடுத்தே தேடுதல் பணிகள் இடம்பெற்றிருந்தன.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan