Paristamil Navigation Paristamil advert login

Noisy-le-Sec : 18 மாடி கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட மக்கள்.. நீண்ட நாள் போராட்டம்!

Noisy-le-Sec : 18 மாடி கட்டிடத்தில் சிக்கிக்கொண்ட மக்கள்.. நீண்ட நாள் போராட்டம்!

18 ஆவணி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 7307


Noisy-le-Sec (Seine-Saint-Denis) நகரில் உள்ள 18 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் பாரம் தூக்கி கடந்த பல நாட்களாக செயற்படவில்லை. பாரம் தூக்கி பழுதடைந்த நிலையில், அக்கட்டிடத்தின் பராமரிப்பாளர்கள் பதிலளிக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோடை கால ஆரம்பத்தில் குறித்த கட்டிடத்தின் பாரம் தூக்கி பழுதடைந்திருந்தது. கட்டிடத்தில் வசிப்பவர்கள் பெரும் சிரமத்திக்கு உள்ளாகியுள்ளனர். வெளியில் செல்ல முடியாமலும், பொருட்கள் மற்றும் உணவு விநியோக நிறுவனத்தின் ஊழியர்கள் விநியோகம் செய்ய மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LogiRep எனும் நிறுவனமே குறித்த பாரம்தூக்கியின் பராமரிப்பாளர்களாகும். ‘மிக விரைவில் பாரம்தூக்கி திருத்தப்படும்’ என அதில் எழுதி ஒட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் அதற்குரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும், தொலைபேசியில் அழைப்பெடுத்தால் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காரணமாக ஊழியர்கள் விடுமுறையில் இருப்பதாகவும் அதன் காரணமாக நிறுவனம் இயங்கவில்லை எனவும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்