லண்டனின் பிரபலமான Somerset House தீ விபத்து

17 ஆவணி 2024 சனி 16:24 | பார்வைகள் : 4276
லண்டனின் தேம்ஸ் ஆற்றுக் கரையில் அமைந்துள்ள பிரபலமான வரலாற்று மையமான சோமர்செட் ஹவுஸில்(Somerset House) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தை கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 125 தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கட்டிடத்தின் மேற்கூரையில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இருப்பதாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக சோமர்செட் ஹவுஸ் தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாக அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து ஊழியர்களும், பொதுமக்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.