டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் தொடர்பில் வெளியாகிய தகவல்
14 ஆடி 2024 ஞாயிறு 13:49 | பார்வைகள் : 10005
தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் குறித்த தகவல்களை எவ்பிஐ வெளியிட்டுள்ளது.
20 வயது தோமஸ் மத்தியு குரூக்ஸ் என்பவரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என தெரிவித்துள்ள எவ்பிஐ இவர் சம்பவம் இடம்பெற்ற பென்சில்வேனியாவின் பட்லரிலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பெத்தெல் பூங்காவை என்ற பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிட்டுள்ளது.
மத்தியு குரூக்ஸ் இரகசிய சேவைப்பிரிவை சேர்ந்தவர்களால் உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதேவேளை தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் பதிவு செய்யப்பட்ட குடியரசுக்கட்சியின் ஆதரவாளராக தன்னை பதிவு செய்துகொண்டவர் இதேவேளை ஜனநாயக கட்சியுடன் இணைந்து செயற்படும் குழுவிற்கு சிறியளவு நிதியை வழங்கியவர் என்பது பொதுஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
இம்முறையே அவர் முதல்தடவையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவிருந்தார் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan