சிலந்தி கடித்ததால் முகத்தில் அழுகிய தோல்களுடன் காணப்படும் பெண்

14 ஆடி 2024 ஞாயிறு 08:41 | பார்வைகள் : 4134
அமெரிக்காவில் 44 வயது பெண் ஒருவரை விஷம் நிறைந்த சிலந்தி கடித்ததால் முகத்தில் தோல்கள் அழுகி , கடும் அவதி அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், 44 வயது மதிக்கதக்க பெண், ஜெசிகா ரோக் அட்லாண்டா. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் வெளியே சுத்தம் செய்துள்ளார். அப்போது, அங்கு பழுப்பு நிறத்தில் இருந்த சிலந்திகள் அவரின் மேல் விழுந்துள்ளது.
சுத்தம் செய்துவிட்டு, அவ்விடத்தை விட்டு வெளியேறிய ஜெசிகாவிற்கு, 24 மணி நேரத்திலேயே முகம், கைகள், தொண்டை ஆகிய இடங்களில் தடிப்பு தடிப்பாக வீங்கிய நிலையில் , நேரம் செல்ல செல்ல முகத்தில் உள்ள தோல்கள் அழுகிய நிலையை அடைந்துள்ளது.
முகம் முழுவதும் காயம் ஏற்படுத்தி, தோல்கள் நெருப்பில் பட்டது போன்ற உணர்வையும் ஏற்படுத்தியது. இது குறித்து தனது GoFundMe பக்கத்தில் தெரிவிக்கையில்,
”இதனால், நான் மிகவும் வேதனை அடைந்தேன். என் கண்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.’ என்று தெரிவித்துள்ளார். இந்த சிலந்தி கடியால்,இவருக்கு கை , கால்களில் உணர்வின்மையும், இயக்கம் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தற்போது, இவர் படிப்படியாக குணமாகி வருவதாகவும், கைகள், கால்கள், மார்புகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வலிமிகுந்த அரிப்பு ஒருபுறம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இந்த பழுப்பு நிற சிலந்தி கடியை பொறுத்தவரை இவை தோல்களை அழுக வைத்தும், புண்களை ஏற்படுத்த கூடிய அளவிற்கு மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது.
இவ்வகையான பழுப்பு வகை சிலந்திகள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது. 0. 5 அடி அங்குலம் நீளம் வரை வளரக்கூடிய இந்த இன சிலந்திகள் கடித்தால், மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3