'Boulevard périphérique' எனும் பாரிசை சுற்றும் வீதியில் எல்லா வாகனங்களும் பயணிக்க திங்கள் முதல் தடை.

10 ஆடி 2024 புதன் 21:05 | பார்வைகள் : 6555
தலைநகர் பாரிசையும் அதன் புறநகர்களுக்கும் இடையில் உள்ள 35.04 கிலோமீட்டர் நீளமான 'le Périphérique' அல்லது 'le Périph' என்று அழைக்கப்படும் 'Boulevard périphérique' எனும் வேக வீதியில் வரும் திங்கட்கிழமை 15/07 முதல் பயணிக்கும் வாகனங்களுக்கு புதிய நடைமுறை ஒன்று அமுலுக்கு வருவதாக பாரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏதுவாக வீதியின் மூன்றாவது தடம் ஒலிம்பிக் போட்டிகளின் வீரர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு படையினர், போன்றவர்களின் வாகனங்கள் செல்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 'le Périphérique' வீதியில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு சமிக்ஞை அடையாளம் மிளிரும் போது குறித்த தடத்தில் பயணிக்க சாதாரண வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடத்தில் பயணிப்பது மட்டுமல்ல வாகனங்களை முந்துவதற்க்கு கூட பயன் படுத்துவது தடையாகும், வீதியில் பொருத்தப்பட்டுள்ள ஒளிப்பதிவு கருவிகள் 'Vidéosurveillance' மூலம் கண்காணிக்கப் பட்டு மீறுவோர் மீது தண்டப் பணம் அறவிடப்படும் என பாரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.