கொவிட் பற்றி கணித்தவர்... இங்கிலாந்து அணி மற்றும் யூரோ கிண்ணம் தொடர்பில் கணிப்பு

10 ஆடி 2024 புதன் 10:29 | பார்வைகள் : 3461
உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த கோவிட் பெருந்தொற்று குறித்து முதல்முறையாக கணித்ததாக கூறும் ஜோதிடர் ஒருவர் தற்போது இங்கிலாந்து கால்பந்து அணி தொடர்பிலும் யூரோ கிண்ணம் யார் வெல்வார் என்றும் தமது கணிப்புகளை பகிர்ந்துள்ளார்.
தென் லண்டனை சேர்ந்த Nicolas Aujula என்பவர் சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடராக அறியப்படுகிறார். பூர்வ ஜென்மத்தில் இவர் எகிப்திய ராணியாக பிறந்திருந்தார் என்றும், பிரெஞ்சு புரட்சியின் போது கிளர்ச்சியாளராக இருந்தார் என்றும் தம்மை அறிமுகம் செய்து வருபவர்.
கொவிட் பெருந்தொற்று குறித்தும் பிரான்சின் Notre Dam தேவாலய தீ விபத்து தொடர்பிலும், அமெரிக்காவில் தொடங்கி உலக நாடுகளில் பரவிய கருப்பின மக்களின் போராட்டம் குறித்தும் முதலில் கணித்தவர் என்றே Nicolas Aujula கூறுகிறார்.
தற்போது அவர், இங்கிலாந்து கால்பந்து அணி அரையிறுதியில் வெல்லுமா என்பது தொடர்பில் தமது கணிப்பை பகிர்ந்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான Bukayo Saka குறித்தும் கணித்துள்ளார்.
சகா மிக விரைவில் பெயரும் புகழும் பெறுவார் என்றும் தமது ஆட்டத்தால் உலக ரசிகர்களை தனது பக்கம் ஈர்ப்பார் என்றும் கணித்துள்ளார். அத்துடன், அரையிறுதியில் ஸ்பெயின் அணி பிரான்சை வெல்லும் என்றும், இங்கிலாந்து அணி நெதர்லாந்தை வெல்வதுடன், யூரோ கிண்ணத்தை ஸ்பெயின் தட்டித்தூக்கும் என்றும் Nicolas Aujula கணித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆட்டத்தில் முதல் பாதி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் இரண்டாவது பாதி ரசிக்கும்படியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி இந்த ஆட்டத்தில் Kyle Walker அல்லது Jude Bellingham சாதிப்பார்கள் என்றும் அவர் கணித்துள்ளார். பிரதமர் ஸ்டார்மர் அரசாங்கத்தின் கீழ் முக்கிய மாற்றம் ஏற்பட இருக்கிறது என்றும், பிரித்தானிய மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வருவார் என்பது உறுதியாகியுள்ளது என்றும் கணித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025