பிரித்தானியாவில் மஞ்சள் எச்சரிக்கை - வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு

9 ஆடி 2024 செவ்வாய் 16:51 | பார்வைகள் : 5565
பிரித்தானியாவில், 24 மணித்தியாலயத்தில் ஒரு மாதத்துக்கு பெய்யவேண்டிய மழை கொட்டித் தீர்க்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்கொட்லாந்தில் வாழ்பவர்களுக்கு, உள்ளூர் நேரப்படி, இன்று இரவு 10.00 மணி முதல் கனமழை பெய்யவிருப்பதாகவும்,
அது நாளை நள்ளிரவு வரை நீடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், ஆகவே, அவர்களுக்கு ’உயிருக்கு ஆபத்து’ மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆகவே, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையில் ஆறு விடயங்களை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
சில வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு மின்வெட்டு மற்றும் பிற சேவைகள் இழப்பு ஏற்படுவதற்கான சிறிய வாய்ப்பு உள்ளது.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கி, சில கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான சிறிய வாய்ப்பு உள்ளது.
வெள்ளம் ஏற்படும் இடங்களில், ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளது.
மழைச்சாரல் மற்றும் வெள்ளத்தால், வாகனம் ஒட்டுவதற்கு கடினமான நிலைமை மற்றும் சில சாலைகள் மூடப்படலாம்.
வெள்ளம் சூழ்ந்த சாலைகளால் சில இடங்கள் மற்ற பகுதிகலிலிருந்து துண்டிக்கப்படுவதற்கு ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது.
வேகமாகப் பாயும் அல்லது ஆழமான வெள்ள நீர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிறிய வாய்ப்பு உள்ளது.
ஆகவே மக்கள் கவனமுடன் செயல்படுமாறு வானிலை ஆராய்ச்சி மையம் கேட்டுகொண்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1