'இந்தியன் 2' படத்தில் கமல் வருகிறாரா?
9 ஆடி 2024 செவ்வாய் 10:35 | பார்வைகள் : 10401
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ திரைப்படம் வரும் வெள்ளி என்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் படம் முழுவதும் வருகிறார் என்று ஷங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.’இந்தியன் 2’ படத்தின் புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் சமீபத்தில் பேசியபோது ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க காரணமே ’இந்தியன் 3’ திரைப்படத்தின் கதை தான் என்று கூறியிருந்தார். இதனால் அவர் ’இந்தியன் 2’ படத்தில் குறைந்த நேரமே வருவார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்து ஷங்கர் ஐதராபாத்தில் நடந்த புரமோஷன் விழாவின்போது விளக்கம் அளித்துள்ளார்.
’இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் படம் முழுவதும் வருவார் என்றும் அவர் திரையில் இல்லாத நேரத்தில் கூட அவரது கேரக்டர் குறித்து தான் மற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இதை அடுத்து’ கல்கி 2898 ஏடி’ படம் போல ஒரு சில நிமிடங்கள் மட்டுமே கமல் ’இந்தியன் 2’ படத்தில் வருவார் என்று கூறியது முழுக்க முழுக்க வதந்தி என்றும் முழு நேரமும் கமல்ஹாசன் இந்த படத்தில் வருவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ‘இந்தியன் 3’ திரைப்படத்தில் இந்தியன் தாத்தா சேனாதிபதியின் தந்தை கேரக்டரிலும் கமல் நடிக்கிறார் என்றும் இந்த படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan