நடந்து முடிந்த தேர்தலில் 400 000 வாக்குக்கள் செல்லுபடியற்றுப் போனது ஏன்? உள்துறை அமைச்சு.

9 ஆடி 2024 செவ்வாய் 06:46 | பார்வைகள் : 9300
1981க்கு பின்னர் அதிகப்படியான வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்த தேர்தல் களம், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தல். இது இவ்வாறு இருக்க அதே தேர்தல் களமே அதிக செல்லுபடியற்ற வாக்குக்கள் கிடைத்த தேர்தல் களமாகவும் உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல் சுற்றில் தீவிர வலதுசாரி கட்சிகள் (Rassemblement National, les Républicains) கூடிய சதவீத வாக்குகளை பெற்று முதலாம் இடத்தினை பெற்றதை அடுத்து, இடதுசாரிகளும், Ensemble (Majorité présidentielle) கட்சியினரும், வலதுசாரிகளின் பலத்தை உடைக்க தங்கள் வேட்பாளர்களை பல இடங்களில் பின்வாங்க செய்து தேர்தலில் வெற்றி பெற்றும் வியூகத்தை வகுத்தனர் இதனால் பல இடங்களில் தீவிர வலதுசாரி (RN) வேட்பாளரும், தீவிர இடதுசாரி (LFI) வேட்பாளரும் மட்டுமே மோதினர். அவ்வாறான பகுதிகளில் இருவரையும் விரும்பாத பல வாக்காளர்கள் தங்களின் வாக்குச் சீட்டில் படங்களை வரைதல், இருவரையும் தீட்டி வாசகங்களை எழுதுதல் என தங்கள் வாக்குகளை செல்லுபடி அற்ற வாக்குகளாக மாற்றி இருக்கின்றனர்.
400 000 வாக்குகளை செல்லுபடி அற்ற வாக்குகளாக செலுத்தும் மனோநிலை மக்களுக்கு வருவதற்கு மற்றும் ஒரு காரணம் பொருத்தமற்ற காலகட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது என்பதும் ஒரு காரணமாகவும் கருதப் படுகிறது, அதேபோல் ஒரு சிலர் தொடர்ச்சியாக தங்களுடைய வாக்குகளை இந்த மாதிரியாக வழங்கும் மனோபாவம் கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025