Paristamil Navigation Paristamil advert login

தோல்விக்கு பொறுப்பேற்கும் ஜோர்தன் பார்தெல்லா..!!

தோல்விக்கு பொறுப்பேற்கும் ஜோர்தன் பார்தெல்லா..!!

8 ஆடி 2024 திங்கள் 16:57 | பார்வைகள் : 10218


நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் RN கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு தோல்வியைச் சந்தித்துக்கொண்டது. இந்த தோல்விக்கு அக்கட்சியின் தலைவர் ஜோர்தான் பார்தெல்லா பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளார்.

முதலாம் சுற்று முடிவில் வெற்றியின் வாசல் வரை சென்ற RN கட்சி, இரண்டாம் சுற்றில் 143 தொகுதிகளைப் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. 'நாங்கள் தவறுகள் செய்துள்ளோம். நானும் தவறிழைந்துள்ளேன். அதில் எனது பங்கினை நான் ஏற்றுக்கொள்கிறேன்.  எங்கள் கட்சி சார்பாக இனவாத கருத்துக்கள் பகிரப்பட்டது. யூத மதம் மீதான கருத்துக்கள் பகிரப்பட்டது. அதுவே கட்சிக்கு பின்னடைவாகவும் இருந்தது!' என ஜோர்தன் பார்தெல்லா தெரிவித்தார்.

அதேவேளை, கட்சியில் மேலும் பல மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டிய தேவை இருப்பதையும் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்