பிரதமரின் பதவி விலகல் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி..!
8 ஆடி 2024 திங்கள் 10:25 | பார்வைகள் : 12786
பிரதமர் கப்ரியல் அத்தாலே தொடர்ந்தும் பிரதமராக பணியாற்றுவார். அவரது பதவி விலகல் கோரிக்கையை ஜனாதிபதி மறுத்துள்ளார்.
இன்று காலை 11.30 மணிக்கு தனது பதவி விலகல் கடிதத்தோடு ஜனாதிபதியின் எலிசே மாளிக்கைக்கு பிரதமர் கப்ரியல் அத்தால் சென்றிருந்தார். ஜனாதிபதி மக்ரோன் அவரது கோரிக்கையை நிராகரித்து, 'இப்போதைக்கு' கப்ரியல் அத்தாலே தொடர்ந்தும் பிரதமராக செயற்படுவார் என அறிவித்தார்.
"நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். அதுவரை கப்ரியல் அத்தால் பணியை தொடருவார்!' என எலிசே மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan