இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இம்மானுவல் மக்ரோன்!

5 ஆடி 2024 வெள்ளி 15:25 | பார்வைகள் : 13541
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கியர் ஸ்ராமருக்கு (Keir Starmer) ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
“வாழ்த்துக்கள் Sir கியர் ஸ்ராமர். உங்களுடைய வெற்றி எங்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. பிரான்ஸ்- பிரித்தானிய இரு தரப்பு ஒத்துழைப்பு, ஐரோப்பாவில் அமைதி மற்று பாதுகாப்பு, காலநிலை மற்றும் செயற்கை நுண்ணறிவு (A.I) போன்றவற்றுக்காக நாம் தொடர்ந்து பணிகளை மேற்கொள்வோம்!” என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தலில், 650 ஆசனங்களை பெற்று தொழிலாளர் கட்சி மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அதை அடுத்து புதிய பிரதமராக கியர் ஸ்ராமர் பதவியேற்றுள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025