Aubervilliers : வாள் வெட்டு தாக்குதலில் நான்கு விரல்களை இழந்த நபர்..!
2 ஆடி 2024 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 13189
வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான 26 வயதுடைய இளைஞன் ஒருவர், நான்கு விரல்களை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Aubervilliers நகரில் இச்சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. 2 மணி அளவில் Avenue du Président-Roosevelt பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த குறித்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரை பின்னால் சென்று மடக்கிப்பிடித்த ஐந்து நபர்கள், அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள பூங்கா ஒன்றில் மறைத்து வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் குறித்த நபர் படுகாயமடைந்தார்.
கத்தியால் குத்தப்பட்டதோடு, இடது கையில் உள்ள மூன்று விரல்களும், வலது கையில் உள்ள ஒரு விரலும் என நான்கு விரல்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.
மார்புப்பகுதியில் 20 செ.மீ நீளமான காயமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலாளிகள் ஐவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan