Paristamil Navigation Paristamil advert login

தண்டவாளங்களில் பாதுகாப்பு  - உள்துறை அமைச்சர்!!

தண்டவாளங்களில் பாதுகாப்பு  - உள்துறை அமைச்சர்!!

2 ஆவணி 2024 வெள்ளி 06:22 | பார்வைகள் : 7036


ஒலிம்பிக் போட்டிகளிக் ஆரம்ப தினமான 26ம் திகதி 54லை மாதம், SNCF இன் பல தண்டவாளத் தொடர்ப்பு இணைப்புகள் சதி வேலையால் நாசப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் TGV தொடருந்துகள் இரண்டு நாட்களிற்கு மேல் இரத்துச் செய்யப்பட்டும், வெகு சிலவே இயங்கியும். பயணிகளைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியிருந்தது.

இதனைத் தடுப்பதற்காகப் பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, தற்காலிக அரசின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனன் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புகளை அதிகரிப்பதுடன், பல ரோந்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துவதாகவும், உள்துறை அமைச்சரும், போக்குவரத்து அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த நாசகார வேலையில் ஈடுபட்டவர்களை நிசயமாகச் சட்டத்தின் முன் கொண்டு வருவேன் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்