போதைப்பொருள், மது போதையினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரிப்பு..!

1 ஆவணி 2024 வியாழன் 15:34 | பார்வைகள் : 11322
பிரான்சில் ஏற்படும் வீதி விபத்துக்களில் பெரும்பான்மையானவை மதுபோதை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவருடம் இடம்பெற்ற விபத்துக்களில் 31% சதவீதமானவை மதுபோதைப் பாவனையினால் இடம்பெற்றுள்ளதாக l’Association des sociétés françaises des autoroutes எனும் பிரெஞ்சு வீதி பாதுகாப்பு துணை நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் (23% சதவீதமான விபத்துக்கள்) இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான சாரதிகளில் பத்தில் நால்வர் மதுபோதை பாவனையில் பயணித்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களிலும் 34 வயதுக்கு கீழுள்ளவர்கள் பெரும்பான்மையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களில் 3,398 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025