சென் நதியில் இன்று நீச்சல் போட்டிகள்!

31 ஆடி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 8563
இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட சென் நதியில் இடம்பெறும் நீச்சல் போட்டிகள், இறுதியாக இன்று புதன்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவார ஞாயிற்றுக்கிழமை சென் நதியில் இந்த நீச்சல் போட்டிகள் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் தண்ணீரில் ஏற்பட்ட மாசடைவு காரணமாக அந்த போட்டிகள் செவ்வாய்க்கிழமைக்கு பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமையும் போட்டிகள் இடம்பெறவில்லை.
அதையடுத்து, இன்று ஜூலை 31, புதன்கிழமை இப்போட்டிகள் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணிக்கு மகளிருக்கான போட்டிகளும், காலை 10.45 மணிக்கு ஆடவருக்கான போட்டிகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1