நயன்தாராவின் மருத்துவ குறிப்பு சர்ச்சையாக காரணம். என்ன?

31 ஆடி 2024 புதன் 04:00 | பார்வைகள் : 4420
நயன்தாரா தற்போது நடிப்பை தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து அந்த தொழில்களின் புரமோசன்களை தனது வலைதளங்களில் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதனை எனது உணவுத் திட்டத்தில் ஒரு பகுதியாக்கியவர் ஊட்டச்சத்து நிபுணர் கனேரிவால். இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிகம் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவிகரமாக இருக்கும்.
இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சித் தரக்கூடியது என்பதால் முகப்பரு உள்ளிட்ட சருமம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். இதில் வைட்டமின்கள் அதிகம் நிரம்பியுள்ளதால் செம்பருத்தி தேநீர் மழைக்காலத்துக்கு மிகவும் சிறந்தது. மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலையில் வைத்திருக்கும். ஆன்டிபாக்டீரியல் என்பதால் பருவகால தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.
இது பொதுவான கருத்து போல தோன்றினாலும் அடுத்து அவர் முதலீடு செய்துள்ள புதிய ஆயுர்வே டீ கம்பெனியின் புரமோஷன் என்று பலரும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், அவரது இந்த பதிவை கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபல நடிகை நயன்தாரா தனது 8.7 மில்லியன் பாலோவர்களை செம்பருத்தி டீ குடிக்க கூறியுள்ளார். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பாக்டீரியா எதிர்ப்பு, தொற்று நோய், முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு செம்பருத்தி டீ பயனாக இருக்கும் என்ற அவரது கூற்று எதுவும் மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகவில்லை.
நயன்தாராவின் இந்தப் பதிவு அவரது "பிரபல ஊட்டச்சத்து நிபுணருக்கான" விளம்பரம் போலவும் தெரிகிறது. எதைப் பற்றியும் தெரியாமல் தவறான தகவல்களால் தனது பாலோவர்ஸ்களை தவறாக வழிநடத்துகிறார். செம்பருத்தி டீயின் நன்மைகள் குறித்து போதுமான ஆதாரங்கள் இல்லாததால், அதனை யாரும் தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டாம்” என தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “முட்டாள்களுடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யாதீர்கள், அவர்கள் உங்களை தங்கள் நிலைக்கு இழுத்துவிடுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1