இணையத்தை கலக்கும் Aya Nakumora பாடல்.. மேம்பாலத்துக்கு 'Pont d'Aya' என பெயர் சூட்டி கொண்டாட்டம்!

30 ஆடி 2024 செவ்வாய் 11:38 | பார்வைகள் : 9912
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது பிரெஞ்சுப் பாடகி Aya Nakumora, நான்கு பாடல்களை பாடியிருந்தமை அறிந்ததே. அவரது நிகழ்ச்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.
குறிப்பாக Tik Tok சமூவலைத்தளத்தில் அவரது நிகழ்ச்சியை பலர் பதிவேற்றியுள்ளனர். மில்லியன் கணக்கில் அது பார்வையிடப்பட்டு வருகிறது. சிலர் அவரது நிகழ்ச்சியை அனிமேசனில் செய்தும் பதிவேற்றி கொண்டாடி வருகின்றனர். பிரெஞ்சுப் பாடகரான charles aznavour இன் இரண்டு பாடல்களையும், தனது இரண்டு பாடல்களையும் இணைத்து அந்த நிகழ்வில் பாடியிருந்தார். பழைய பாடல்களான 'For me formidable' மற்றும் 'La Bohème' ஆகிய இரு பாடல்களும் ரசிகர்களின் நினைவுகளை தூண்டிவிட, அத்தோடு Aya Nakumora இன் Djadja மற்றும் Pookie ஆகிய இரு பாடல்களும் இணைந்துகொள்ள, நிகழ்ச்சி மறக்க முடியாத அனுபவமாக மாறியிருந்தது.
அத்தோடு, ரசிகர்கள் தற்போது நிகழ்ச்சி இடம்பெற்ற Pont des Arts மேம்பாலத்துக்கு 'Pont d'Aya' என பெயர் சூட்டி கொண்டாடி வருகின்றனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1