■ அனல்காற்று.. 56 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

30 ஆடி 2024 செவ்வாய் 08:29 | பார்வைகள் : 6839
இன்று நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடுமையான வெப்பம் நிலவும் எனவும், அனல் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் (Météo France) எதிர்வுகூறியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை பல்வேறு நகரங்களில் 40°C வெப்பம் பதிவான நிலையில், இன்று நாட்டின் தென் கிழக்கு நகரங்கள் உள்ளிட்ட 56 மாவட்டங்களில் கடுமையான வெப்பம் நிலவ வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 36°C தொடக்கம் 41°C வரை இந்த வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இல் து பிரான்சுக்குள் பொது போக்குவரத்துக்களில் வெப்ப அனலை தவிர்ப்பதற்குரிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
நாளை, ஜூலை 31 ஆம் திகதி புதன்கிழமையும் இதேபோன்ற கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025