Paristamil Navigation Paristamil advert login

'Canicule à Paris' 'வெப்ப அலை பாரிஸ்' 2.5 மில்லியன் தண்ணீர் போத்தல்கள் வினையோகம்.

'Canicule à Paris' 'வெப்ப அலை பாரிஸ்' 2.5 மில்லியன் தண்ணீர் போத்தல்கள் வினையோகம்.

30 ஆடி 2024 செவ்வாய் 08:08 | பார்வைகள் : 17315


இன்று செவ்வாய்க்கிழமை 30/07 பாரிசில் 40°C வெப்பநிலை பதிவாகியுள்ளது இந்த கடும் வெப்ப அலையில், நிலக்கீழ் தொடரூந்து சேவையில் 'Métro' பயணிக்கவுள்ள பயணிகளுக்கு இன்று முழுவதும் தண்ணீர் போத்தல்கள் வினையோகம் செய்யப்பட உள்ளதாக Ile-de-France பிராந்தியத்தின் தலைவர் Valérie Pécresse தெரிவித்துள்ளார்.

வெப்ப அலைக்கா Île-de-France பகுதி மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் Ile-de-France Mobilités போக்குவரத்து ஆணையம் (IDFM) பல புதிய வழிகளை பயன் படுத்தி  பயணிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது.

இருப்பினும் நோய்வாய்ப்பட்டவர்கள், வயோதிபர்கள், குழந்தைகள், விரைவில் களைப்படைய கூடியவர்கள், நிலக்கீழ் தொடரூந்து சேவைகளை பயன்படுத்துவதை பகல் வேளைகளில் தவிர்க்குமாறும், ஏனைய பயணிகளும் மிக அவதானமாக இருக்குமாறும் Ile-de-France Mobilités போக்குவரத்து ஆணையம் (IDFM) வேண்டுகோள் விடுத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்