Paristamil Navigation Paristamil advert login

ஐந்து தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் பிரான்ஸ்..!

ஐந்து தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் பிரான்ஸ்..!

30 ஆடி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 10293


நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பிரான்ஸ் ஐந்து தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. அதிகூடிய தங்கம் வெண்ட பட்டியலில் பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Fencing என அழைக்கப்படும் வாள் சண்டையில் ஒரு தங்கமும், 2024 Cycling Cross-Country விளையாட்டில் ஒரு தங்கமும், படகுப்போட்டியான Canoe Slalom இல் ஒரு தங்கமும், ஏழு பேர் கொண்ட ஆடவருக்கான ரக்பி மற்றும் நீச்சல் போட்டிகளுக்காக இரண்டு தங்கமும் என மொத்தமாக ஐந்து தங்கங்களை பிரான்ஸ் இதுவரை பெற்றுள்ளது.

நேற்று ஒரே நாளில் இரண்டு தங்கம் உள்ளிட்ட எட்டு பதக்கங்களை பிரான்ஸ் வென்றிருந்தது. அவற்றுடன் சேர்த்து பிரான்ஸ் தற்போது 16 பதக்கங்களை பெற்றுக்கொண்டு இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.

இந்த பட்டியல் தங்க பதக்கத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும். உதாரணத்துக்கு அமெரிக்க இந்த மூன்று நாட்களில் 20 பதக்கங்களை வென்றிருந்த போதும், அதில் மூன்று மட்டுமே தக்க பதக்கம் என்பதால் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கின்றது.

ஆறு தங்கப்பதக்கங்களுடன் ஜப்பான் முதலாவது இடத்தில் இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்