இல் து பிரான்ஸ் போக்குவரத்துக்களில் அனல்காற்றை சமாளிக்க புதிய திட்டம்! (plan canicule)
29 ஆடி 2024 திங்கள் 16:44 | பார்வைகள் : 10325
அடுத்துவரும் நாட்களில் இல் து பிரான்சுக்குள் அதிகளவு வெப்பம் நிலவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்துக்களில் வெப்ப காலத்துக்கு ஏற்ற plan canicule திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளில், ட்ராம் மற்றும் மெற்றோக்களில் பயணிக்கும் மக்கள் வெப்பத்தில் இருந்தும் அனல் காற்றில் இருந்து பாதுகாப்பாக பயணிக்க இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வாமை, திடீர் சுகையீனர், மயக்கம் போன்ற நோய்களில் இருந்து பயணிகள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும், வீதிகளில் நீர்நிலைகள் ஏற்படுத்துதல், குளிர்சாதனங்களை இயக்குதல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற வசதிகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
இன்று ஜூலை 29 ஆம் திகதி, திங்கட்கிழமையில் இருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan