பண்ணையில் தீ விபத்து.. 400 ஆடுகள் பலியான சோகம்!

27 ஆடி 2024 சனி 15:21 | பார்வைகள் : 8196
இன்று சனிக்கிழமை காலை பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 400 ஆடுகள் பலியாகியுள்ளன. பிரான்சின் தென்கிழக்கு மாவட்டமான Drôme இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜூலை 27, இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு இந்த தீ பரவியதாகவும், கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ, அருகில் இருந்த பண்ணைக்கு பரவியதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். 400 ஆடுகள் பண்ணையில் இருந்த நிலையில், அவற்றில் ஒன்றுகூட உயிர்தப்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அருகே 20 மாடுகள் அடைத்துவைக்கப்பட்டிருந்த கூடாரம் ஒன்று இருந்ததாகவும், அங்கும் தீ பரவிய நிலையில், மாடுகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 தீயணைப்பு படையினர் இணைந்து மிகுந்த போராட்டத்தின் மத்தியில் மாடுகளைக் காப்பாற்றினர்.
ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.