Paristamil Navigation Paristamil advert login

முத்திரைகளின் விலை அதிகரிப்பு..!!

முத்திரைகளின் விலை அதிகரிப்பு..!!

24 ஆடி 2024 புதன் 18:59 | பார்வைகள் : 6147


முத்திரைகளில் விலை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அதிகரிக்கப்பட உள்ளது. சராசரியாக 6.8% சதவீதத்தினால் இந்த விலை அதிகரிக்கப்பட உள்ளது.

பச்சை நிற முத்திரையின் விலை 1.29 யூரோக்களில் இருந்து 1.39 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. 

20 கிராம் எடையுள்ள தபால்களுக்கு அறவிடப்படும் 5.36 யூரோக்கள் பெறுமதியுள்ள முத்திரை 5.74 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. 

பச்சை முத்திரையானது கடந்த 2 வருடங்களில் 19.8% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1.16 யூரோக்களாக அதன் விலை விருந்தது.

இந்நிலையில், இந்த புதிய விலைகளை பிரெஞ்சு தபாலகம் (La Poste) இன்று ஜூலை 25, புதன்கிழமை அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்