பரிஸ் : சிறுமியை மோதி தள்ளிய மகிழுந்து... சாரதி தப்பி ஓட்டம்..!

24 ஆடி 2024 புதன் 12:06 | பார்வைகள் : 10221
சிறுமி ஒருவரை மோதித்தள்ளிவிட்டு மகிழுந்து ஒன்று தப்பிச் சென்றுள்ளது. சாரதி தேடப்பட்டு வருகிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் பரிஸ் 20 ஆம் வட்டாரத்துக்கும் 11 ஆம் வட்டாரத்துக்கும் இடையே இடம்பெற்றது. Rue de Belleville வீதி மற்றும் Rue des Couronnes வீதி இணையும் சந்தியில், இரவு 8.30 மணி அளவில் தனது பெற்றோருடன் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை வேகமாக வந்த மகிழுந்து மோதித்தள்ளியுள்ளது.
சிறுமி காயமடைந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குறித்த சிறுமி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் எனவும், பெற்றோருடன் சுற்றுலா வந்த நிலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய சாரதி தேடப்பட்டு வருகிறார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1