ஒலிம்பிக்கை பயன்படுத்தி அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார் - மக்ரோன் மீது குற்றச்சாட்டு..!

24 ஆடி 2024 புதன் 10:00 | பார்வைகள் : 9170
ஓகஸ்ட் நடுப்பகுதிக்குப் பின்னரே புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என நேற்றைய தொலைக்காட்சி நேர்காணலில் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்திருந்தமை உடனடியாகவே அரசியல் மட்டத்தில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மரீன் லு பென் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி மக்ரோன் ஒலிம்பிக்கை வைத்து அரசியல் விளையாட்டில் ஈடுபடுகிறார்!” என குற்றம் சாட்டினார்.
அதேவேளை, மக்ரோனது இந்த செயற்பாடுகள் ‘எங்களது ஜனநாயகத்துக்கு எதிரான தீவிர வன்முறை’ என Jean-Luc Mélenchon குற்றம் சாட்டியுள்ளார். ’அவர் தேர்தல் முடிவுகளை மறைக்க விரும்புகிறார். வாக்களித்த மக்களை மதிக்க வேண்டும். அவர் பதவி விலக வேண்டும்!” என Mélenchon குறிப்பிட்டார்.