இளைஞனுக்கு சரமாரி கத்திக்குத்து.... Dugny நகரில் பரபரப்பு..!!

23 ஆடி 2024 செவ்வாய் 19:00 | பார்வைகள் : 7105
Dugny (Seine-Saint-Denis) நகரில் இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். பத்து தடவைகள் வரை சரமாரியாக குத்தப்பட்டதாகவும், உயிருக்கு போராடும் நிலையில் அவசரப்பிரிவில் இளைஞன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Maurice-Thorez பகுதியில் இடம்பெற்றுள்ளது. rue Louise-Michel வீதியில் நடந்து சென்ற குறித்த 20 வயதுடைய இளைஞனை சூழ்ந்துகொண்ட நால்வர் கொண்ட குழு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளது.
பத்து தடவைகள் கத்தியால் குத்தப்பட்டதில் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட நால்வரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.