Paristamil Navigation Paristamil advert login

தொலைக்காட்சியில் உரையாற்றும் ஜனாதிபதி மக்ரோன்..!

தொலைக்காட்சியில் உரையாற்றும் ஜனாதிபதி மக்ரோன்..!

23 ஆடி 2024 செவ்வாய் 06:54 | பார்வைகள் : 20013


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஜூலை 23, செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார். 

இரவு 8.10 மணிக்கு இந்த உரை France 2 மற்றும் franceinfo தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும். பொது பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மக்ரோன் முதன்முறையாக உரையாற்ற உள்ளார். இநதனால் இந்த உரைக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  

இரண்டு பகுதிகளாக இந்த உரை இடம்பெற உள்ளது. முதற்பாதி அரசியல் தொடர்பாகவும், இரண்டாம்பாதி ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாகவும் இடம்பெறும் என அறிய முடிகிறது.

இந்த நேர்காணலை பல்வேறு சமூகவலைத்தளங்ககூடாக நேரடியாக பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்