Smic : அடிப்படைச் சம்பளம் உயருகிறதா..??!

22 ஆடி 2024 திங்கள் 22:00 | பார்வைகள் : 8423
SMIC என அழைக்கப்படும் அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கலாம் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை JDD ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின் போது, அடிப்படை ஊதியம் தொடர்பில் சில தகவல்களை வெளியிட்டார். €1,400 யூரோக்களாக இருக்கும் அடிப்படை ஊதியத்தினை தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அதிகரிக்க முடியும் மற்றும் ஊழியர்கள் அந்த அதிகரிப்பை பெற தகுதியுடையவர்களாவர் என அமைச்சர் தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அமைச்சரவைக் தெரிவு இடம்பெற உள்ள நிலையில், தற்போதுள்ள அனைத்து அமைச்சர்களும் பதவியிழக்க, அல்லது வேறு பதவிகளுக்கு மாற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் Gérald Darmanin, Nord மாவட்டத்தின் Tourcoing தொகுதியில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.