கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் - சென் நதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு..!!

22 ஆடி 2024 திங்கள் 21:30 | பார்வைகள் : 8663
சென் நதியில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜூலை 20, சனிக்கிழமை இச்சம்பவம் Mantes-la-Jolie (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள சென் நதியில் சடலம் இன்று மிதந்து வருவதை பார்த்துவிட்டு, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது.
அது, வயது அடையாளம் காணப்படாத ஆணின் சடலம் எனவும், கை மற்றும் கால்கள் மின்கம்பி ஒன்றினால் கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விபரங்கள், நாளை ஜூலை 23, செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025