ஒலிம்பிக் ஆரம்பநாளின் போது விமானநிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்...!!!

22 ஆடி 2024 திங்கள் 21:00 | பார்வைகள் : 12665
விமான நிலைய ஊழியர்கள் வரும் ஜூலை 26 ஆம் திகதி - ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகும் நாளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
பரிஸ் விமானநிலையங்களுக்கான கட்டுப்பாட்டு சபைக்கு (ADP) கீழ் இயங்கும் விமான நிலையங்களில் 11.57% சதவீதமான ஊழியர்களைக் கொண்டுள்ள Force Ouvrière (FO) தொழிற்சங்கமே இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளஊ. போனஸ் தொகையாக 1,000 யூரோக்கள் வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஜூலை 26, வெள்ளிக்கிழமை காலை 5 மணிமுதல் மறுநாள் காலை 7 மணி வரைக்கும் இந்த வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025