ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்.. ஜனாதிபதி மக்ரோன் பாராட்டு..!

22 ஆடி 2024 திங்கள் 18:04 | பார்வைகள் : 7325
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
'ஜோ பைடனின் தைரியத்துக்கும் கடமை உணர்ச்சிக்கும் நான் தலை வணங்குகிறேன்!' என தெரிவித்தார்.
'தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில் இரு நாட்டு உறவுகளும் மேலும் வலுவடைந்துள்ளது. அட்லாண்டிக்கின் இரு திசைகளுக்குமான நட்பை அவரது துணிவு எடுத்துரைக்கிறது' என மக்ரோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025