Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் கமலா ஹரிசிற்கு  ஆதரவு தெரிவிக்கும்  பிரபலங்கள்...

அமெரிக்காவில் கமலா ஹரிசிற்கு  ஆதரவு தெரிவிக்கும்  பிரபலங்கள்...

22 ஆடி 2024 திங்கள் 09:07 | பார்வைகள் : 5212


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஜோபைடன் விலகி கமலா ஹரிஸ் போட்டியிடவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் பல பிரபலங்கள் கமலா ஹரிசிற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் ஹரிஸ் நம்பகரமானவர் ஆழமாக மக்களால் பரிசோதிக்கப்பட்டவர் என நடிகை ஜேமி லீ ஹேட்ரிஸ் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் வெள்ளையர் அல்லாதவர்களின் உரிமைகளிற்காக வலுவான விதத்தில் குரல்கொடுப்பவர் .

அமெரிக்கா தேசிய ரீதியில் பெரும் பிளவை சந்தித்துள்ள தருணத்தில் அவரது செய்தி அமெரிக்காவிற்கு நம்பிக்கையை ஐக்கியத்தை அளிக்கும் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பெண்களின் உலகம் நீங்கள் அதில் வாழ்வது அதிஸ்டம் எனவும் பாடகர் கட்டி பெரி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை எக்ஸ் தளத்தில் நகைச்சுவை நடிகர் . போட்டியிலிருந்து விலகும் ஜோ பைடனின் முடிவு குறித்து லெஜென்ட் என பதிவிட்டுள்ளார்.


எங்கள் ஜனநாயகத்தை காப்பாற்றியமைக்காக ஜோ பைடனிற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக விளங்கவேண்டும் என ஒஸ்கர் வென்ற நடிகை பார்பரா ஸ்டிரெய்ஸான்ட் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்