Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

5200mAh பற்றரி, 100W சார்ஜிங் வேகம்! Honor 200 Pro விலை மற்றும் சிறப்பம்சங்கள்

5200mAh பற்றரி, 100W சார்ஜிங் வேகம்! Honor 200 Pro விலை மற்றும் சிறப்பம்சங்கள்

22 ஆடி 2024 திங்கள் 08:16 | பார்வைகள் : 11086


Honor 200 Pro என்பது அனைத்து விதங்களிலும் ஈர்க்கும் அம்சங்களைக் கொண்ட முதன்மை ஸ்மார்ட்போனாக திகழ்கிறது.

மென்மையான பார்வை அனுபவத்திற்காக 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.78-இன்ச் பெரிய OLED திரை.

துல்லியமான காட்சிகளை உறுதி செய்யும் FHD+ ரெசல்யூஷன் (1224 x 2700 பிக்சல்கள்).


உயர் பிரகாசம் (4000 நிட்ஸ்), கண் பராமரிப்பு மற்றும் தூக்கத்தை பாதுகாக்கும் திரை போன்ற மேம்பட்ட அம்சங்கள் எந்த சூழலிலும் வசதியான பயன்பாட்டை வழங்குகிறது.

கடினமான பணிகள் மற்றும் கேம்களுக்கு மென்மையான செயல்திறனை உறுதி செய்யும் Qualcomm Snapdragon 8s Gen 3 processor மூலம் இயக்கப்படுகிறது.

சிறந்த மல்டி டாஸ்கிங் திறன்களுக்கு 12GB ரேம் வழங்கப்படுகிறது.


512GB சேமிப்பானது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு போதுமான இடத்தை வழங்குகிறது.

 துல்லியமான தகவல்களை படம் பிடிப்பதற்கான 50MP-கொண்ட பிரைமரி சென்சார்.

 தொலைதூர பொருட்களை நெருக்கமாக கொண்டு வர 50x டிஜிட்டல் Zoom மற்றும் 2.5x ஆப்டிகல் Zoom கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகிய பன்முகத்தன்மை கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.


பரந்த இடங்கள் மற்றும் குழு புகைப்படங்களை படம் பிடிப்பதற்கான 12MP அல்ட்ரா-வைட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

உயர் தர செல்பிகளுக்கும் வீடியோ அழைப்புகளுக்கும் ஏற்றவாறு 50MP முன்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆண்ட்ராய்டு 14 உடன் honor magicOS 8.0.

சாதனத்தை விரைவாக இயக்குவதற்கு 100W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5200mAh பற்றரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

In-Display fingerprint சென்சார்.

ஹானர் 200 ப்ரோ இந்தியாவில் ₹57,998 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்