Paristamil Navigation Paristamil advert login

பரிசில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!!

பரிசில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!!

21 ஆடி 2024 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 20764


இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.

இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கொள்ளைச் சம்பவம் 11.6% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த தகவல் பரிசுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அச்சத்தை குறைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பரிஸ் மற்றும் அதன் புறநகர் (பரிசின் அருகே உள்ள மூன்று மாவட்டங்கள்) இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், குறிப்பாக பரிசில் 17% சதவீதமாக இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, பாலின வேறுபாடுகள் மீதான தாக்குதல்கள் இந்த ஆறு மாதங்களில் அதிகரித்துள்ளன. 5.9% சதவீதத்தால் இந்த தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்