Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

காசாவிலிருந்து திரும்பிய அவுஸ்திரேலிய மருத்துவரின் உருக்கமான தகவல்

காசாவிலிருந்து திரும்பிய அவுஸ்திரேலிய மருத்துவரின் உருக்கமான தகவல்

20 ஆடி 2024 சனி 11:26 | பார்வைகள் : 5386


காசாவின் சுகாதாஅல் அக்சா மருத்துவமனையில்  தொண்டராக பணியாற்றிவிட்டு அவுஸ்திரேலிய திரும்பியுள்ள மருத்துவர் புஸ்ரா ஒத்மன், கண்ணீரை பெரும்போராட்டத்துடன் கட்டுப்படுத்தியவாறு தனது அனுபவங்களை விபரித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கின் மத்திய பகுதியில் உள்ள டெய்ர் அல்பலாவில் மருத்துவமனையில் புரிந்துகொள்ள முடியாத மூன்று வாரங்கள் பணியாற்றிய பின்னர் அவர் மெல்பேர்ன் திரும்பியுள்ளார்.

என்னால் மறக்கமுடியாத சில விடயங்கள் உள்ளன,குழந்தைகள் மற்றும் சிறுவர்களின்  எரிந்த சதைகளின் மணம் , அவர்கள் அவசரஅவசரமாக தீவிரகிசிச்சை பிரிவிற்கு கொண்டுவரப்படுவது போன்றவை என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன  என  அவர் தெரிவித்துள்ளார்.

தரை முழுவதும் சிந்தப்பட்ட குருதியின் மணத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்,நோயாளியான தாயின் கதறலையும்,தனது குழந்தையை நோக்கிய கதறலையும் நான் மறக்கமாட்டேன் என அவர் ஏபிசிக்கு தெரிவித்துள்ளார்.

ஒத்மன் பெருங்குடல் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்.

ஒன்பதாவது மாதங்களாக  நீடிக்கும் காசா யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டவர்களிற்கு சேவையாற்றிய அவுஸ்திரேலியா நியுசிலாந்து மருத்துவ சங்கத்தின் முதல் பெண்மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசாவில் சேவையாற்றிய நாட்களில் சில சந்தர்ப்பங்களில் ,குழந்தைகளிற்கான சத்திரசிகிச்சைகளை இருட்டில் செய்யவேண்டிய நிலை காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்கள் நானும் ஏனைய சத்திரசிகிச்சை நிபுணர்களும் நாள்ஒன்றிற்கு 20 மணித்தியாலங்கள் பணியாற்றினோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளிற்கு மெத்தையில் வைத்தும் சில வேளைகளில் தரையில் வைத்தும்  அவர்கள் சிகிச்சைகளை வழங்கினர்.

சில சந்தர்ப்பங்களில் அவர்கள் நோயாளிகளை இழந்தனர் - நோயாளிகள் உயிரிழந்தனர், அவ்வாறு உயிரிழந்த பலர் சிறுவர்கள்.

மோசமான சத்திரகிசிச்சைக்கு பின்னர் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம் சிகிச்சைகளையும் வழங்கினோம், என அவர் தெரிவித்தார்.

மோர்பின் கிட்டத்தட்ட கிடைக்கவேயில்லை,  சத்திரசிகிச்சையின் பின்னர் நோயாளிகள் அலறுவார்கள் என ஒத்மன் தெரிவித்துள்ளார்.

நிரம்பிவழிந்த நோயாளிகளைசமாளிக்க முடியாமல் வைத்தியர்களும் ,வைத்திய அமைப்பும் திணறியதை காணமுடிந்தது,ஏற்கனவே உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த சிறுவர்களிற்கு நான் சிகிச்சை வழங்கினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் சுகாதாரஅமைப்புமுறை நூலிலையில் தொங்குகின்றது,தீவிரகிசிச்சை பிரிவுகளில் மின்சாரம், மின்விளக்குகள் ,மின்விசிறி போன்றன துண்டிக்கப்பட்ட செயல் இழந்த நிலையில் நீங்கள் பல மணிநேரம் பணியாற்றவேண்டிய நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் எஞ்சியிருக்கும் அல்அக்சா மருத்துவமனை பெயரளவிற்கே இயங்குகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் தொடர்ந்து இயங்குவதற்கு மருத்துவமனை மருத்துவஉதவி மற்றும் மின்பிறப்பாக்கிகளை நம்பியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் நோயாளிகள் வலிகளை போக்குவதற்கான வசதிகள் அற்றவர்களாக காணப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுத்தமான தண்ணீர், சத்திரசிகிச்சைக்கான உபகரணங்கள்,ஆடைகள், தொற்றுநீக்கிகள் போன்றவை இல்லாததால் எனது நோயாளர்களிற்கு காயங்களில் இருந்து தொற்றுபரவும் ஆபத்து 100 வீதமாக காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றும் ஈஸ்டேர் ஹெல்த் மருத்துவமனைகளில் தொற்றுவீதம் ஐந்து வீதமே என அவர் தெரிவிக்கின்றார்.

இரவில் பல தடவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட அறையில் நாங்கள் வயிற்றில் சத்திரகிசிச்சையை மேற்கொண்டேன்,அங்கிருந்தவர்கள் தங்கள் கையடக்க தொலைபேசியின் வெளிச்சத்தினை நோயாளியின் வயிற்றினை நோக்கிதிருப்பி உதவினார்கள்,அதன் உதவியுடன் நாங்கள் சத்திரசிகிச்சையில் ஈடுபட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு பல இலையான்கள் வரும் நீங்கள் சத்திரசிகிச்சையில் ஈடுபடும்போது காயத்தில் அவை அமரலாம் என அவர் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி

வர்த்தக‌ விளம்பரங்கள்