பரிஸ் : செக் குடியரசு தூதரகத்தில் பரவிய தீ..!! மூவர் காயம்..!!

17 ஆடி 2024 புதன் 15:26 | பார்வைகள் : 8435
பரிசில் உள்ள செக் குடியரசின் தூதரகத்தில் இன்று ஜூலை 17, புதன்கிழமை தீ விபத்தொன்று ஏற்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு தீ பரவியதாகவும், உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீ உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், தூதரகத்தின் அருகே உள்ள கட்டிடங்களில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
60 தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.