Paristamil Navigation Paristamil advert login

ஒன்றாரியோவில் அதிகரித்துள்ள குரங்கம்மை நோயாளர்கள்

ஒன்றாரியோவில் அதிகரித்துள்ள குரங்கம்மை நோயாளர்கள்

17 ஆடி 2024 புதன் 02:04 | பார்வைகள் : 4855


ஒன்றாரியோ மாகாண்தில் குரங்கம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜுன்மாதம் 15ம் திகதி வரையில் மாகாணத்தில் 67 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒன்றாரியோ பொதுச் சுகாதார அலுவலகம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகாத போதிலும், தற்பொழுதும் நோயாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஒன்றாரியோவில் பதிவான குரங்கம்மை நோயாளர்களில் 95 வீதமானவர்கள் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் இந்த தொற்று பரவுகை அதிகமாக காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்