பெண்களுக்கு ஆலோசனை வழங்கி கோடி கணக்கில் சம்பாதிக்கும் பிரபலம்
15 ஆடி 2024 திங்கள் 13:38 | பார்வைகள் : 7357
சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், சிலருக்கு பணம் ஈட்டித்தரும் தளமாகவும் விளங்குகிறது.
அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஆலோசனைகள் கூறி ஆண்டுக்கு ரூ.163 கோடி சம்பாதிக்கிறார்.
ஆனால் இவர் கூறும் ஆலோசனைகள் சர்ச்சையாக உள்ளது.
அதாவது பணக்கார ஆண்களை திருமணம் செய்வது எப்படி? என்பது குறித்து பெண்களுக்கு இவர் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
க்யூ குவின் என்ற பெயர் கொண்ட இவர், காதல் உறவுகளை கையாள்வது குறித்து சர்ச்சை கருத்துக்களை வழங்குவதாக கூறப்படுகிறது.
திருமணம் செய்வதை கோட்டைக்குள் செல்வது என்றும், பணத்தை அரிசி என்றும், கர்ப்பத்தை பந்தை சுமப்பது என்றும் குறிப்பிடும் இவர், உறவுகளை மதிப்பதில்லை.
ஆனாலும் இவரை கலந்து ஆலோசிக்க பெண்களிடம் குறிப்பிட்ட தொகையை பெறுகிறார்.
ரூ.12,945, ரூ.43,179, கவுன்சிலிங் பேக்கேஜூகளுக்கு மாதம் ரூ.1.17 லட்சம், டேட்டிங் உத்திகளுக்கு தனி கட்டணம் என பல வகையான பேக்கேஜூகளின் வருமானம் ஈட்டி வருகிறாராம்.
அந்த வகையில் ஆண்டுக்கு தோராயமாக 142 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.163 கோடி) சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ள நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan