ட்ரோன்கள் மூலம் உருவாக்கப்பட்ட அசத்தல் வாணவேடிக்கை!!

15 ஆடி 2024 திங்கள் 07:10 | பார்வைகள் : 8364
ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வு வாணவேடிக்கை நேற்று இரவு ஈஃபிள் கோபுரத்தில் இடம்பெற்றது. பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இந்த வாணவேடிக்கை நிகழ்வு இடம்பெற்றது.
பல வண்ணங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், ட்ரோன் கருவிகளை பயன்படுத்தி உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இதற்காக 1,000 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மிக குறிப்பாக இவ்வருடம் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளை நினைவுகூரும் விதமாக இராட்சத அளவில் ’ஒலிம்பிக் தீபம் ஒன்றை மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தூக்கிக்கொண்டு ஓடுவது’ போன்ற உருவம் காட்சிப்படுத்தப்பட்டது பலரை ஆச்சரியப்படுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான இடம்பெறும் பரா-ஒலிம்பிக் போட்டிகளை பெருமைப்படுத்தும் விதமாக அந்த உருவம் காட்சிப்படுத்தப்பட்டது.
நேற்றைய வாணவேடிக்கை நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீழே காணலாம்...
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025