‘வணங்கான்’ படத்திற்கு கமல், தனுஷால் வந்த சிக்கல்!

12 ஆனி 2024 புதன் 08:28 | பார்வைகள் : 7414
நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ மற்றும் தனுஷின் ‘ராயன்’ என இந்தப் பெரிய படங்கள் இரண்டும் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இதனால், அருண் விஜயின் ‘வணங்கான்’ படத்திற்கு சிக்கல் வந்திருக்கிறது.
இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ மற்றும் தனுஷின் ‘ராயன்’ படங்கள் இரண்டும் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12ம் தேதி ‘இந்தியன்’ படம் வெளியாகிறது. இந்தப் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து, ஜூலை 26ம் தேதி ‘ராயன்’ வெளியாகிறது.
இதனால், ஜூலை மாத வெளியீடு என அறிவிக்கப்பட்ட அருண் விஜயின் ‘வணங்கான்’ படம் இந்த இரண்டு பெரிய படங்களுக்கு இடையில் சிக்கியுள்ளது. ஜூலை மாதம் முதல் வாரம் ‘வணங்கான்’ வெளியிட்டால் அடுத்த வாரத்தில் ‘இந்தியன்’ படம் வெளியாகி விடும்.
அடுத்ததாக ‘ராயன்’ வந்து விடும் என்பதால் ’வணங்கான்’ படத்திற்கு தியேட்டர்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களும் பெரிய படங்களுக்கு செல்லவே அதிக வாய்ப்பு என்பதால், ஜூலை மாதத்தில் இருந்து வேறு தேதிக்கு ‘வணங்கான்’ ரிலீஸ் தேதியை மாற்ற வேண்டிய சூழல் அமைந்துள்ளது.
இல்லை எனில் இதன் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று படக்குழு கருதுகிறதாம். விரைவில் ‘வணங்கான்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்குமா அல்லது ஜூலை மாதமே ரிஸ்க் எடுத்து வெளியிடுமா என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1