Paristamil Navigation Paristamil advert login

Essonne : விடுதியில் தீ விபத்து.. எட்டு பேர் காயம்..!

Essonne : விடுதியில் தீ விபத்து.. எட்டு பேர் காயம்..!

11 ஆனி 2024 செவ்வாய் 17:12 | பார்வைகள் : 6551


Vigneux-sur-Seine (Essonne) நகரில் இன்று ஜூன் 11 ஆம் திகதி காலை இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் எட்டுப்பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை 4 மணிக்கு இந்த தீ விபத்து இடம்பெற்றது. இங்குள்ள Balladins எனும் விடுதியில் அதிகாலை தீ பரவியது. உடனடியாக தீயணைப்பு படையினர். தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடினார்.

இச்சம்பவத்தில் எட்டுப்பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் தீயணைப்பு படையினர் எனவும், தீயை அணைக்க முற்பட்டபோது மாடிப்படிக்கட்டு உடைந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்