ஹர்பஜன் சிங்கிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்....!

11 ஆனி 2024 செவ்வாய் 09:38 | பார்வைகள் : 5385
எனது கருத்துக்களுக்கு நேர்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஹர்பஜன் சிங்கை குறிப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் கடைசி ஓவரை அர்ஷிதீப் சிங் வீசினார். அவரது ஓவரில் 11 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.
அர்ஷிதீப் சிங் மற்றும் சீக்கியர்கள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் (Kamran Akmal) தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இனவெறி கருத்துக்களை தெரிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வீரர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh), ''உங்கள் இழிவான வாயைத் திறப்பதற்கு முன் சீக்கியர்களின் வரலாற்றை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்'' என கூறினார்.
இதனால் சர்ச்சை வெடித்தது. இதனைத் தொடர்ந்து கம்ரான் அக்மல் தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், ''எனது சமீபத்திய கருத்துக்களுக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
ஹர்பஜன் சிங் மற்றும் சீக்கிய சமூகத்திடம் நேர்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
எனது வார்த்தைகள் பொருத்தமற்றதாகவும், அவமரியாதை செய்வதாகவும் இருந்தன.
உலகெங்கிலும் உள்ள சீக்கியர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதில்லை. நான் உண்மையிலேயே வருந்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1