அமெரிக்காவில் மனிதருக்கு பரவும் பறவைக்காய்ச்சல்- அரசாங்கத்தின் அதிரடி

11 ஆனி 2024 செவ்வாய் 09:07 | பார்வைகள் : 10496
அமெரிக்காவில் மனிதர்களுக்கு மத்தியில் பரவைக்காய்ச்சல் பரவி வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவில் மனிதருக்கு பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுக்க கறந்த பாலின் விற்பனைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பறவைக் காச்சலால் முதல் மனித உயிர் பலியானதை கடந்த வாரம்(ஜூன் 5) உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்தது.
பறவைக்காய்ச்சல் மாடுகளையும் பாதிப்பது அதிகரித்துள்ளதால் கறந்த கச்சா பாலை அருந்தவும், விற்கவும் தடை விதித்து அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், அதன் மாகாணங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் பல்வேறு மாகாணங்களில் கறவை மாடுகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்காவின் வேளாண்மைத்துறை அறிக்கையின்படி அங்குள்ள 82 மந்தைகளில் பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கறந்த பாலை அருந்துவது என்பது அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் ஏகனவே தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் ’மனித நுகர்வுக்கு அல்ல’ என்ற பிரிவின் கீழ் விற்பனையாவதை, பல்வேறு தேவைகளுக்காக மனிதர்கள் அருந்துவது தொடர்ந்து வருகிறது. அதேசமயம் சொந்தமாக கறவை மாடுகளை பராமரிப்போரும் கறந்த பாலை அருந்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் அறிவுறுத்தலை அடுத்து பல்வேறு உலக நாடுகளும் கறந்த பச்சை பாலை அருந்துவதை தடை செய்து வருகின்றன.
பறவைக் காய்ச்சல் வைரஸ் மட்டுமன்றி, இதர விபரீத வைரஸ்கள், இகோலி, பாக்டீரியா தொற்றுகள் போன்றவை மனிதர்களை அதிகம் பாதிக்க வாய்ப்பாகிறது.
அதே வேளை பாலை பேஸ்டுரைஸ் செய்வது அல்லது முறையாக காய்ச்சுவதன் மூலம் இந்த தொற்றுகள் நம்மை பாதிக்காது பாதுகாப்பு பெற முடியும்.
மேலும் பறவைக் காய்ச்சல் அதிகம் பரவிவரும் தற்போதைய சூழலில், காய்ச்சல், இருமல், தொண்டை புண், தசை வலி, தலைவலி, சுவாச பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, ஈறுகளில் ரத்தப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1