Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் காதல் மலர்ந்தது எப்படி?

பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் காதல் மலர்ந்தது எப்படி?

11 ஆனி 2024 செவ்வாய் 05:38 | பார்வைகள் : 7127


கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி தன் தந்தையை போலவே சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு சினிமாவில் இயக்குனராக களமிறங்கினார். அந்த வகையில் அவர் இயக்கிய முதல் படம் வாண்டட். இப்படத்தில் வெங்கட் பிரபு மற்றும் எஸ்.பிபி சரண் ஆகியோர் ஹீரோவாகவும், கங்கை அமரன், எஸ்பிபி ஆகியோர் காமெடியன்களாக நடிக்க இருந்தனர். யுவன் இப்படத்திற்கு இசையமைக்க இருந்தார். ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

பின்னர் இசையமைப்பாளராக முடிவெடுத்த பிரேம்ஜி, தன் தம்பி யுவன் சங்கர் ராஜாவிடம் சில படங்களில் பணியாற்றினார். பின்னர் யுவன் இசையில் பாடல்கள் பாட ஆரம்பித்தார் பிரேம்ஜி. குறிப்பாக ராப் இசை பாடல்களுக்கு அதிகளவில் பிரேம்ஜியை தான் பயன்படுத்தி வந்தார் யுவன். பிரேம்ஜி பாடிய பாடல்கள் வரிசையாக ஹிட்டானதால் இவருக்கு பிற இசையமைப்பாளர்கள் இசையிலும் பாட வாய்ப்பு கிடைத்தது.

பிரேம்ஜியின் திறமையை பார்த்து வியந்து போன நடிகர் சிம்பு, அவரை தனது இயக்கத்தில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தில் நடிகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 28 படம் பிரேம்ஜிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் அவர் பேசிய காமெடி வசனங்கள் இன்றளவும் டிரெண்டிங்கில் உள்ளது. இதனால் பிரேம்ஜியை தன் லக்கி சார்மாக பயன்படுத்தி வருகிறார் வெங்கட் பிரபு.

இதுவரை வெங்கட் பிரபு இயக்கிய எல்லா படங்களிலும் பிரேம்ஜி இடம்பெற்று இருக்கிறார். இப்படி நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் பிரேம்ஜி, 45 வயது வரை திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவே இருந்தார். இதனால் அவரைப் பார்க்கும்போதெல்லாம் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி எப்போ கல்யாணம் என்பது தான்.

அப்படி பலரும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த கேள்விக்கு அண்மையில் விடை கொடுத்தார் பிரேம்ஜி. அதன்படி பிரேம்ஜி என்கிற பெண்ணை கடந்த ஜூன் 9ந் தேதி கரம்பிடித்தார் பிரேம்ஜி. அவரது திருமணம் திருத்தணியில் நடைபெற்றது. பிரேம்ஜியின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பிரேம்ஜியின் மனைவி இந்து பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப்பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி பிரேம்ஜியின் மனைவி இந்து சேலத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறாராம். இருவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியதால் இருவரும் குடும்பத்தினரின் சம்மதத்திற்காக காத்திருந்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். பிரேம்ஜியை விட அவரது மனைவி இந்து 20 வயது இளையவராம். காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை இந்த ஜோடி நிரூபித்து இருக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்