Corbeil-Essonnes : வீடொன்றில் இருந்து போதைப்பொருள், ஆயுதங்கள் மீட்பு..!

10 ஆனி 2024 திங்கள் 17:02 | பார்வைகள் : 6211
Corbeil-Essonnes (Essonne) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பாரிய அளவு போதைப்பொருள், துப்பாக்கிகள், ரொக்கப்பணம் ஆகியவை மீட்க்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை குறித்த நகரில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த காவல்துறையினர், வீட்டினை சோதனையிட்டனர். அதன்போது 700 கிராம் போதைப்பொருள், €10,165 யூரோக்கள் பணம், கலிபர் வகை துப்பாக்கிகால், அதன் சன்னங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவத்தில் தொடர்புடைய 25 வயதுடைய பெண் ஒருவரும், 27 மற்றும் 28 வயதுடைய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
25 தொடக்கம் 28 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.