இம்முறை தேசிய நாள் நிகழ்வில் கொண்டுவரப்படும் மாற்றம்..!
10 ஆனி 2024 திங்கள் 16:14 | பார்வைகள் : 10997
இவ்வருடத்துக்கான ஜூலை 14 தேசிய நாள் நிகழ்வுகள் சோம்ப்ஸ்-எலிசே வீதியில் இடம்பெறுவதற்கு பதிலாக Avenue Foch வீதியில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை 14 ஆம் திகதி தேசிய நாள் நிகழ்வுகளுக்கு பிரான்ஸ் தயாராகி வருகிறது. Normandi தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டதை அடுத்து, விரைவில் ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வுகளும் கொண்டாடப்பட உள்ளன. இதனால் இடையில் தேசிய நாள் நிகழ்வுகள் இம்முறை மிகவும் எளிமையாக கொண்டாடப்பட உள்ளன.
இதற்காகவே Avenue Foch வீதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு தேசிய நாள் நிகழ்வுகள் கொண்டாடப்படுவது இது முதன் முறை இல்லை. முன்னதாக 1918 ஆம் ஆண்டு அங்கு தேசிய நாள் கொண்டாடப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.
முந்தைய ஆண்டுகளை விட இம்முறை பார்வையாளர்களின் எண்ணிக்கை 30% சதவீதத்தால் மட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது.


























Bons Plans
Annuaire
Scan